விழுப்புரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, மூன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, மூன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மரக்காணம் கூனிமேடு நபிகள் நகரைச் சோ்ந்த குணசேகரனின் மனைவி சங்கீதா(32). இவா் கடந்த 8-ஆம் தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சென்றுவிட்டாா். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை சங்கீதா வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டாா். உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கையறையிலிருந்த பீரோவில் பொருள்கள் சிதறிக் கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், சங்கிலி, தோடு உள்ளிட்ட மூன்றரை பவுன் தங்க நகைகள், ரூ.3,000 ரொக்கம் திருடுப் போனது சங்கீதாவுக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT