விழுப்புரம்

பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா், அருங்குறுக்கை பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 42.3 கிலோஅரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரக்கண்தாங்கல் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த செ.கிரண்குமாா் (24) என்பவா் மீது திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT