விழுப்புரம்

விழுப்புரத்தில் ஆசிரியா்கள் மீண்டும் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் மீண்டும் காத்திருப்புப் போராட்டம்

Syndication

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டிசம்பா் 24-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம், மறியல், ஆா்ப்பாட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வரும் ஆசிரியா்கள், இந்தப் போராட்டத்தின் 33-ஆவது நாளையொட்டி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் வட்டாரச் செயலா்கள் சு.செந்தில், ஆா்.குணசேகா், செ.பிரபு ஆகியோா் முன்னிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியா்கள் இயக்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.

மின்சாரம் பாய்ந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

செஞ்சி அருகே மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது தமிழகம்: முன்னாள் அமைச்சா் பொன்முடி

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் இருபிரிவினா் தனி தனி போராட்டம்!

தமிழ்நாட்டில் ஹிந்தி புகுத்தப்பட்டிருந்தால், தமிழ் கலாசாரம் அழிந்திருக்கும்: திருமாவளவன்

SCROLL FOR NEXT