கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி தொகுதி 1952ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு தேர்தலில் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் தொகுதியாக மாறியது. அதன் பின்னர் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போது நெல்லிக்குப்பத்தையும், பண்ருட்டியையும் தனியாகப் பிரித்து இரு தொகுதிகளாக அறிவித்தனர். மீண்டும் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக 2011இல் பண்ருட்டி தொகுதியுடன் நெல்லிக்குப்பம் சேர்க்கப்பட்டது.
அடங்கியுள்ள பகுதிகள்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: இந்தத் தொகுதியில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளும், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகளும் உள்ளன. மேலும் அண்ணாகிராமம், பண்ருட்டி என இரண்டு ஒன்றியங்கள் உள்ளன.
அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள பகுதிகள்: பைத்தாம்பாடி, உளுத்தாம்பட்டு, காவனூர், எனதிரிமங்கலம், கொரத்தி, அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம், பகண்டை, கொங்கராயனூர், கோழிப்பாக்கம், மாளிகைமேடு, திராசு, பூண்டி, கழப்பாக்கம், திருத்துறையூர், கரும்பூர், அவியனூர், அழகுபெருமாள்குப்பம், ஒறையூர், வரிஞ்சிப்பாக்கம், பணப்பாக்கம், மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, பெருமாள்நாயக்கன்பாளையம், சித்தரசூர், பாலூர், எழுமேடு, லட்சுமிநாராயணபுரம், கணிசப்பாக்கம், கோட்டலாம்பாக்கம், பண்ரக்கோட்டை, மேல்அருங்குணம், கீழ்அருங்குணம், சன்னியாசிப்பேட்டை, எய்தனூர், சுந்தரவாண்டி, சுந்தரவாண்டி, பல்லவராயநத்தம், பலாப்பட்டு, சிறுநங்கைவாடி.
பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள பகுதிகள்: எல்.என்.புரம், பூங்குணம், அங்குசெட்டிப்பாளையம், மணப்பாக்கம், நத்தம், மணபுத்தூர், சிறுகிராமம், குடுமியான்குப்பம், வீரப்பெருமாநல்லூர், கொளப்பாக்கம், ராயர்பாளையம், சேமக்கோட்டை.தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 251.
வாக்காளர்கள்
ஆண் 1,11,968
பெண் 1,14,612
திருநங்கைகள் 10
மொத்தம் 2,26,590
மொத்த வாக்குச்சாவடிகள் 251
தேர்தல் நடத்தும் அதிகாரி தொடர்பு எண்
மு.மதியழகன் (தொடர்பு எண்: 94425 28217).
இதுவரை வென்றவர்கள்
1952 ராதாகிருஷ்ணன் (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி)
1967 பண்ருட்டி ராமச்சந்திரன் இந்திய தேசிய காங்கிரஸ்)
1971 பண்ருட்டி ராமச்சந்திரன் (திமுக)
1977 பண்ருட்டி ராமச்சந்திரன் (அதிமுக)
1980 பண்ருட்டி ராமச்சந்திரன் (அதிமுக)
1984 பண்ருட்டி ராமச்சந்திரன் (அதிமுக)
1989 நந்தகோபால கிருஷ்ணன் (திமுக)
1991 பண்ருட்டி ராமச்சந்திரன் (பாமக)
1996 ராமசாமி (திமுக)
2001 வேல்முருகன் (பாமக)
2006 வேல்முருகன் (பாமக)
2011 சிவக்கொழுந்து (தேமுதிக)
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகரம், வியாபார நிறுனங்கள் நிறைந்த பகுதியாகும். பண்ருட்டி பகுதியில் முந்திரி மற்றும் அதைச் சார்ந்த தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்தத் தொகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பு.
புகழ்பெற்ற திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில், ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் சரநாராயணப் பெருமாள் கோயில்கள் இங்கு அமைந்துள்ளன.
வீரட்டானேஸ்வரர் கோயிலை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கை.
இந்தத் தொகுதியில் வறட்சி, புயல் என தொடர் பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
மலட்டாறை தூர்வார வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாகும்.
தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.
பண்ருட்டி பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
மேலும், முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைப்பு, முந்திரி மற்றும் பலாப் பழத்தில் இருந்து பழக்கூழ் தயாரித்தல் போன்ற மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றுவதற்கான திட்டங்களும் எதிர்கால அத்தியாவசிய தேவையாகும்.
நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட உரிய இடம் இல்லை. மயானத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், இறந்தவர்களின் சடலங்கள் கெடிலம் நதியில் புதைக்கப்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன எரி தகனமேடை இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
முறையான வடிகால் வசதி இல்லாததால் கெடிலம் நதி அசுத்தம் அடைகிறது. தொகுதியில் பெரும்பாலான ஏரி, ஆறு, குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதுபோன்ற கோரிக்கைகளை தேர்தலில் வெற்றி பெறுவோர் கவனத்தில் கொண்டால் சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.