முகப்பு
கடலூர்

திமுக, பாஜகவை விமர்சித்தால் எதிர்விளைவுகள் மோசமானதாக இருக்கும்: ஹெச்.ராஜா மிரட்டல்

திமுக, பாஜகவை விமர்சித்து ஓரம்கட்ட நினைத்தால், அதன் எதிர்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

திமுக, பாஜகவை விமர்சித்து ஓரம்கட்ட நினைத்தால், அதன் எதிர்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிதம்பரத்துக்கு திங்கள்கிழமை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 வடரங்கத்திலிருந்து, வடணல் வரை கொள்ளிடக் கரையோர கிராமங்களை பார்வையிட்டேன். கொள்ளிடக் கரையோர கிராமங்களில் குடிநீரின்றி மக்கள் அவதியுறுகின்றனர். குடிநீருக்கு பஞ்சம் என்றால், விவசாயம் எப்படி நடைபெறும்?
 மேலும், அந்தப் பகுதியில் கடல்நீர் 6 கி.மீ. வரை உட்புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது. எனவே, தமிழக அரசு வடணல் பகுதியில் படுக்கை அணை (ஆஉஈ ஈஅங) கட்ட வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனியார் பள்ளி, கல்லூரி கட்டணங்களை குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை வரவேற்கிறேன். கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதற்கு திராவிட கட்சிகளின் 50 ஆண்டு கால ஊழல்தான் காரணம்.

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு என்றும், நீட் தேர்வு குறித்தும் திமுகவினர் மற்றும் தி.க. தலைவர் வீரமணி பொய் பரப்பி வருகின்றனர்.

ஐஐடி சேருவதற்கு அரசின் ஜேஇஇ தேர்வு இன்று வரை நடைபெற்று வருகிறது. அதற்கு திமுக இன்று வரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தற்போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பெரும்பான்மையான மருத்துவக் கல்லூரிகளை தனியார் நடத்துகின்றனர். நீட் தேர்வினால் அவர்கள் அதிகத் தொகை வாங்க முடியாது. தனியார் மருத்துவக் கல்லூரி உரிமையாளர்களின் தூண்டுதலால் நீட் தேர்வை எதிர்க்கின்றனர் என்றார் ஹெச்.ராஜா.

பேட்டியின் போது, கடலூர் மாவட்ட பாஜக தலைவர் சரவணசுந்தரம், ஜோதி குருவாயூரப்பன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.திருமாறன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஜெயக்குமார், நகரத் தலைவர் கனகசபை, வெங்கடேச தீட்சிதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →