முகப்பு
கடலூர்

பாஜக மாணவர் அமைப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் எதிரே பாஜகவின் அகில வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் (ஏபிவிபி), கேரள முதல்வரின் உருவப் படத்தை எரித்தும்,

கடலூர்

பாஜக மாணவர் அமைப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் எதிரே பாஜகவின் அகில வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் (ஏபிவிபி), கேரள முதல்வரின் உருவப் படத்தை எரித்தும்,

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் எதிரே பாஜகவின் அகில வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் (ஏபிவிபி), கேரள முதல்வரின் உருவப் படத்தை எரித்தும், அந்தக் கட்சிக் கொடியை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏபிவிபியினரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடலூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் நகரச் செயலர் வி.சுப்புராயன் தலைமை வகித்தார்.
 மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் கோ.மாதவன், பி.கருப்பையன். ஒன்றியச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணன், சிப்காட் செயலர் ஆர்.ஆளவந்தார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.அமர்நாத், ஜெ.சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதேபோல, விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலர் அசோகன் தலைமை வகித்தார். சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சிதம்பரத்தில்...
 சிதம்பரம் காந்திசிலை அருகே புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கட்சியின் நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், ராஜா, வாஞ்சிநாதன், கலியமூர்த்தி, அமுதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பாஜகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
 நெய்வேலியில்...
 இதேபோல, நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முத்துவேல் தலைமை வகித்தார். நெய்வேலி நகரச் செயலர் எஸ்.திருஅரசு, சிஐடியு பொதுச் செயலர் டி.ஜெயராமன், பொருளாளர் சீனுவாசன், மாவட்டக் குழு உளுப்பினர் எம்.மீனாட்சி நாதன், நகரக் குழு உறுப்பினர்கள் மணிமாறன், முருகன், கார்த்திகேயன், மணி, மாதர் சங்கத் தலைவி தனம், செயலர் மாதவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →