உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு: மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்றச் சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் பொன்.சண்முகம், பொருளாளர் ஆர்.தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மன வளர்ச்சி குன்றியோருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.1,500-ஆக உயர்த்த வேண்டும்.
சுயதொழில் செய்வதற்கு வழங்கப்படும் கடனுதவியை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.