முகப்பு
கடலூர்

ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் காயம்

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் ஆட் டோ கவிழ்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 5:04 am IST
பகிர்:

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் ஆட் டோ கவிழ்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர். குள்ளஞ்சாவடியிலிருந்து காட்டுக்கூடலூருக்கு செவ்வாய்க்கிழமை ஆட்டோ ஒன்று ஆள்களை ஏற்றிச் சென்றது. ஆட்டோவை கிருஷ்ணன்குப்பம் பகுதியைச் சேர்ந்த வ.கிறிஸ்துராஜ் (28), ஓட்டினார். ஆட்டோவில் ஏ.பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமார் (29), அப்பியம்பேட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி (25), கிருஷ்ணங்குப்பத்தைச் சேர்ந்த ஜான்சிலோரிய மேரி (31) உள்ளிட்டோர் பயணித்தனர்.  சமட்டிக்குப்பம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில், செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.