கடலூர்

வரதட்சிணை கொடுமை:  விரிவுரையாளர் கைது

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக தனியார் கல்லூரி விரிவுரையாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

DIN

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக தனியார் கல்லூரி விரிவுரையாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
 கடலூரை அடுத்துள்ள காராமணிக்குப்பம், ராஜாராம் நகரில் வசிப்பவர் சண்முகவேல். இவரது மகள் மகேஸ்வரிக்கும் (26), பண்ருட்டியை அடுத்துள்ள கட்டியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் மகன் பெரியழகன் (32) என்பவருக்கும் 17.6.2018 அன்று  திருமணம் நடைபெற்றது. பெரியழகன் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில்  விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். 
 இந்த நிலையில், 20 சவரன் தங்க நகை, கார் வேண்டும் எனக் கேட்டு மகேஸ்வரியை அவரது கணவர் பெரியழகன்,  மாமியார் செந்தாமரை, மாமனார் தேவநாதன் மற்றும் நாராயணன்  
ஆகியோர்  உடல் மற்றும் மனதளவில் கொடுமைப்படுத்தினராம். இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில்  போலீஸார் பெரியழகனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், தலைமறைவான செந்தாமரை, தேவநாதன், நாராயணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT