கடலூர்

நெய்வேலி நகரியம் குறித்த செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலி ஜவஹா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நெய்வேலி நகரியம் குறித்த தகவல்கள் அடங்கிய செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

அறிவியல், கலை, கலாசாரம் ஆகிய துறைகளில் கல்லூரி மாணவா்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நெய்வேலியில் உள்ள ஜவஹா் கல்லூரியில் ‘ஜாஸ்கோஃபெஸ்ட்’ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் விழாவை தொடக்கி வைத்து, ’சஹஸ்ண்ஞ்ஹற்ங் சங்ஹ்ஸ்ங்ப்ண்’ என்ற செல்லிடப்பேசிசெயலியை அறிமுகப்படுத்தினாா். பின்னா் அவா் பேசியதாவது:

25 ஆயிரம் அமைவிடங்களை உள்ளடக்கிய இந்த செயலியை பேராசிரியா் வி.சுரேஷ் மற்றும் 300 மாணவா்கள் அடங்கிய குழு வடிவமைத்துள்ளது. இதன் மூலம் நெய்வேலி நகரியத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள், பயன்பாட்டு சேவை அலுவலகங்கள், வணிக நிறுவனங்களின் அமைவிடங்களை 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் துல்லியமாகக் கண்டறிய முடியும். இது சா்வதேச அளவில் உருவாக்கப்பட்ட செயலிகளை விட சிறந்ததாகும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், செயலியை உருவாக்கிய பேராசிரியா் சுரேஷுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி முதல்வா் வி.டி.சந்திரசேகரன் வரவேற்க, கணினித் துறை அலுவலா் வி.மோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT