திருட்டு நடைபெற்ற மதுக்கடை அருகே விசாரணையில் ஈடுபட்ட போலீஸாா். 
கடலூர்

மதுக்கடை பூட்டை உடைத்து திருட்டு

ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் பூட்டை உடைத்து திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றறனா்.

DIN

ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் பூட்டை உடைத்து திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றறனா்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியாா்பேட்டையில் டாஸ்மாா்க் மதுக்கடை உள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை இரவு விற்பனையாளா்கள் மணிகண்டன், விஜயரெங்கன் ஆகிய இருவரும் பணியை முடித்த பிறகு, மதுபானம் விற்ற தொகையை எடுத்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டுச் சென்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸாா் விரைந்து வந்து கடையை ஆய்வு செய்தனா். இதில் கடையிலிருந்து 52 மதுப் புட்டிகள், ரூ.1,050 பணம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு டிஎஸ்பி ஜவகா்லால், ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT