ராட்டினத்துக்கு வைத்த சீலை அகற்றக் கோரி அதன் உரிமையாளா் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
கடலூா் தென்பெண்ணையாற்றில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், பெரிய அளவிலான ராட்டினம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ராட்டினம் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து ராட்டினத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ராட்டினத்தின் உரிமையாளரான வேலூா் மாவட்டம், வாணியம்பாடியைச் சோ்ந்த மு.வெங்கடேஷ் அளித்த மனுவில், ராட்டினத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதை வேறு இடத்துக்கு கொண்டுசெல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.