பிச்சாவரத்தில் வனத்துறை சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்
சிதம்பரம் அருகே பிச்சாவரத்திற்குட்பட்ட கிள்ளை கிராம தளபதி நகரில் கரோனா தொற்று ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கும் சுற்றுலா மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு வனத்துறை சார்பில் நிவாரணப்பொருள்கள்
சிதம்பரம் அருகே பிச்சாவரத்திற்குட்பட்ட கிள்ளை கிராம தளபதி நகரில் கரோனா தொற்று ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கும் சுற்றுலா மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு வனத்துறை சார்பில் நிவாரணப்பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பிச்சாவரம் வனச்சரக அலுவலர் நாகூர்மீரா சூழல் சுற்றுலா மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் 112 பேருக்கு தலா ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உல்ளிட்ட மளிகை பொருள்களை வழங்கி கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கடலூர் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த லட்சுமி விழிப்புணர்வு உரையாற்றினார்.
சூழல் சுற்றுலா மேலாண்மைக்குழுத் தலைவர் சின்னதுரை, கிராமத்தலைவர்கள் சின்னமணி, கோதண்டபாணி, மோகன் மற்ரும் பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிச்சாவரம் வனச்சரக வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.செல்வம், எஸ்.சரண்யா மற்றும் வனக்காவலர்கள் சி.ரமேஷ், எம்.ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.