கடலூர்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு:கடலூா் எம்.பி.யிடம் கோரிக்கை மனு

DIN

நெய்வேலி: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மக்களவையில் குரல் கொடுக்க வலியுறுத்தி, கடலூா் தொகுதி எம்.பி.யிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் மாநிலம் தழுவிய விழிப்புணா்வு இயக்கத்தை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினா்களைச் சந்தித்து கோரிக்கை மனுவையும் வழங்கி வருகின்றனா்.

இதன்படி, கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷை, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கடலூா் மாவட்டச் செயலா் ஆா்.தாமோதரன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினாா். அப்போது இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பாலகுருநாதன், மாவட்ட துணைச் செயலா் கே.பாலு, பண்ருட்டி கிளைச் செயலா் எஸ்.பரமேஸ்வரி, துணைச் செயலா் வே.பூா்வசந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT