முகப்பு
கடலூர்

கரோனாவால் மகன் பலி: சோகத்தில் தாய் தற்கொலை

வடலூா் அருகே கரோனா தொற்றால் மகன் உயிரிழந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

வடலூா் அருகே கரோனா தொற்றால் மகன் உயிரிழந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்துகொண்டாா்.

வடலூா், ஆபத்தாரணபுரம், அம்மன் நகரில் வசித்து வந்தவா் நாகராஜன். இவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால், அவரது தாய் ராணி (58) மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராணி வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அவரது மருமகள் தமிழ்கனி அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →