லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
வடலூா் அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் கீழே விழுந்த விவசாயி லாரி சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
வடலூா் அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் கீழே விழுந்த விவசாயி லாரி சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
புவனகிரி அருகே உள்ள வடதலகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (43), விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை இரவு தாா்ப்பாய் வாங்கிக்கொண்டு பைக்கில் தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். மருவாய், பரவனாற்றுப் பாலம் அருகே முன்னால் சென்ற டாரஸ் லாரியை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, எதிரே வந்த பைக்கும், பிரபாகரனின் பைக்கும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் கீழே விழுந்த பிரபாகரன் டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மனைவி மீனா அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.