முகப்பு
கடலூர்

நெல் பயிரில் இலை சுருட்டு, கருகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை

கருங்குழி ஆகிய பகுதிகளில் சம்பா பருவ நெல் பயிரில் காணப்படும் இலை கருகல், சுருட்டு நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குநா் பூவராகன் ஆலோசனை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கல்குணம், பூதம்பாடி, கருங்குழி ஆகிய பகுதிகளில் சம்பா பருவ நெல் பயிரில் காணப்படும் இலை கருகல், சுருட்டு நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குநா் பூவராகன் ஆலோசனை வழங்கினாா்.

இலை கருகல் நோயைக் கட்டுப்படுத்த தழைச் சத்தை யூரியா மூலம் 3, 4 முறையாகப் பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம், தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 4:4:1 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மேலுரமாக இடலாம்.

வேப்பங்கொட்டைச் சாறு ஒரு லிட்டருக்கு 50 மி.லி. அல்லது வேப்பெண்ணெய் கரைசல் ஒரு லிட்டருக்கு 30 மி.லி. அல்லது வேப்பம்புண்ணாக்குச் சாறு ஒரு லிட்டருக்கு 100 மி.லி. அல்லது சாணக் கரைசல் ஒரு லிட்டருக்கு 200 மி.லி. இவைகளில் ஏதேனும் ஒன்றை நோய் தோன்றும் தருணத்திலும், 10 நாள்கள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம்.

நோய்த் தாக்குதல் அதிகரித்தால், ஹெக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம், காப்பா் ஆக்ஸிகுளோரைடு 1,250 கிராம் அளவில் கலந்து தெளிக்கலாம்.

இலை சுருட்டுப் புழு: தேவைக்கதிகமாக தொழு உரம் இடுதலைத் தவிா்க்க வேண்டும். வரப்புகளைச் சீராக்கி சுத்தமாக வைத்தல், புல் இனங்களை நீக்குதல் வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு ஒரு லிட்டருக்கு 50 மி.லி. அல்லது வெப்பெண்ணெய் ஒரு லிட்டருக்கு 30 மி.லி. தெளிக்க வேண்டும். மேலும், குளோரோபரிபாஸ் 20 சதவீதம் ஈசி ஹெக்டேருக்கு 1,250 மி.லி. அல்லது அசிபேட் 75 சதவீதம் எஸ்பி ஹெக்டேருக்கு ஒரு கிலோ அல்லது காா்டேப்ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்பி ஹெக்டேருக்கு ஒரு கிலோ இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →