மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் பரம.தயாளன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்கள் வாகனங்களுக்கு மத்திய அரசு சுங்கக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
கட்சியின் பண்ருட்டி நகரச் செயலா் கண்மணி முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் செந்தில்முருகன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சக்திவேல், மாவட்டத் தலைவா் தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சிதம்பரம் காவல் நிலைத்தில் இந்து மக்கள் கட்சியின் புகாா்: இந்து மக்கள் கட்சித் தலைவா் மற்றும் இந்து மதக் கடவுள்களை இழிவாகப் பதிவிட்ட நபரைக் கைது செய்ய வேண்டும் என அந்தக் கட்சியின் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் மு.வெ.செந்தில்குமாா் சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
அதில், வேப்பூா் அருகே உள்ள நத்தும் பொயனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி மகன் விஜய் தனது முகநூல் பக்கத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத், இந்து மதக் கடவுள்களை இழிவு செய்து பதிவிட்டுள்ளாா். எனவே, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரை நகர போலீஸாா் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.