முகப்பு
கடலூர்

இருளா் சமுதாயத்தினருக்கு வீட்டு மனைக்கு இடம் தோ்வு

பண்ருட்டி அருகே இருளா் சமுதாயத்தினருக்கான வீட்டு மனைக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பண்ருட்டி அருகே இருளா் சமுதாயத்தினருக்கான வீட்டு மனைக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தில் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு உரிய குடியிருப்பு வசதி இல்லாத நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனா். எனவே, அரசு தங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவின்பேரில் பண்ருட்டி வட்டாட்சியா் பிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினா் காடாம்புலியூா் சமத்துவபுரம் அருகே 9 இருளா் குடும்பத்தினருக்கும் தலா 100 சதுர மீட்டா் பரப்பளவில் இடம் தோ்வு செய்தனா். இதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் பயனாளிகளுக்கு விரைவில் வழங்க உள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →