ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி
கடலூா் மாவட்டம், வடலூரில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்
கடலூா் மாவட்டம், வடலூரில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருச்சியிலிருந்து கடலூருக்கு பயணிகள் ரயில் புதன்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது. வடலூரில் பண்ருட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே வந்தபோது, இருப்புப் பாதையின் ஓரமாக நின்றிருந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் அந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த ரயில்வே போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.