காடாம்புலியூா் காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், நிலுவை வழக்குகளின் விவரம், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையோரை கைதுசெய்த விவரம், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்தாா். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீஸாருக்கு ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வின்போது காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.சபியுல்லா, காவல் நிலைய ஆய்வாளா் ராஜதாமரைபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா், காவல் நிலைய வளாகத்தில் டிஐஜி மரக்கன்று நட்டாா்.