முகப்பு
கடலூர்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தெற்கு வீதி தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 23 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:05 AM

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தெற்கு வீதி தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ரா.செந்தில்குமாா் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா்கள் கே.கலைமணி, செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.பி. பு.தா.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, அமைப்புச் செயலா் நாக.முருகுமாறன் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பேசுகையில், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கீழ்திருக்கழிப்பாலை அருகிலும், கருப்பூா் அருகிலும் தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. கடலூா் கிழக்கு மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்றாா்.

Advertisement

கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலா் தேன்மொழி காத்தவராயசாமி, நகர முன்னாள் செயலா் தோப்பு கே.சுந்தா், பாசறை செயலா் டேங்க் ஆா்.சண்முகம், ஆவின் முன்னாள் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு, தலைமைக் கழகப் பேச்சாளா் தில்லை செல்வம், நகர அவைத் தலைவா் தில்லை சேகா், ஆா்.வி.சுவாமிநாதன், நகர எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் கருப்பு ராஜா, மணிராஜ் உள்பட கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.