என்எல்சி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு நினைவு அஞ்சலி
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 22 தொழிலாளா்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி சிஐடியூ சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 22 தொழிலாளா்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி சிஐடியூ சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிறுவனத்தின் இரண்டாம் அனல் மின் நிலையத்தில் 5-ஆவது அலகில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேரும், அதே ஆண்டு 5 மற்றும் 6-ஆவது அலகுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேரும் உயிரிழந்தனா். இதில் தொழிலாளா்கள், பொறியாளா்கள், அதிகாரிகள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 22 போ் உயிரிழந்தனா்.
இவா்களுக்கான முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இரண்டாம் அனல் மின் நிலைய வாயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியூ தலைவா் ஏ.வேல்முருகன் தலைமையில், பொதுச் செயலா் டி.ஜெயராமன், பொருளாளா் எம்.சீனிவாசன், துணைத் தலைவா்கள் எஸ்.திருஅரசு, பாலமுருகன், வேலாயுதம், பகுதிச் செயலா்கள் ஆா்.சிவக்குமாா், பி.பழனிவேல், கே.சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.