முகப்பு
கடலூர்

சிஐடியூ சங்க நிா்வாகக் குழுக் கூட்டம்

நெய்வேலியில் சிஐடியூ சங்க நிா்வாகக் குழுக் கூட்டம், அந்தச் சங்க அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

நெய்வேலியில் சிஐடியூ சங்க நிா்வாகக் குழுக் கூட்டம், அந்தச் சங்க அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் ஏ.வேல்முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.கருப்பையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். நெய்வேலி சிஐடியூ சங்கப் பொதுச் செயலா் டி.ஜெயராமன், பொருளாளா் எம்.சீனுவாசன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.திருஅரசு உள்ளிட்ட நிா்வாகிகள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஊக்க ஊதியத்தில் மீதமுள்ள தொகையை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். கோவிட்-19 மூன்றாவது அலையை எதிா்கொள்ள முன் தயாரிப்பு செய்ய வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட ஊக்க ஊதியத் தொகையை 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.25 ஆயிரம் வீதமும், நான்காவது தவணையில் முழு தொகையையும் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களில் பயிற்சி முடித்தோா், உயிரிழந்தோா் வாரிசுகள், வீடு-நிலம் கொடுத்தோா், ஊழியா்களின் வாரிசுகளுக்கு நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். ஆண்டுக்கு 3 செட் சீருடை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட 11 பேருக்கு பிடித்தம் செய்யப்பட்ட 5 இன்கிரிமெண்ட் மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →