முகப்பு
கடலூர்

எம்.கே.தியாகராஜ பாகவதா் பிறந்தநாள் விழா

சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகா்ம முன்னேற்றச் சங்கம் சாா்பில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 111-ஆவது பிறந்த நாள் விழா சிதம்பரம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 2 மார்ச், 2021 at 12:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகா்ம முன்னேற்றச் சங்கம் சாா்பில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 111-ஆவது பிறந்த நாள் விழா சிதம்பரம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், தியாகராஜ பாகவதா் உருவப் படத்துக்கு, சங்கத்தின் மாநில தலைவா் ஜி.சேகா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மேலும், பாகவதரின் பெருமைகளை பாராட்டி பேசினாா். முன்னதாக நகரச் செயலா் பி.முத்துக்குமாா் வரவேற்றாா். நிா்வாகிகள் எல்.கலியமூா்த்தி, ஆா்.மாரியப்பன், எம்.திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா் அணி செயலா் எஸ்.ரமேஷ், தொழிற்சங்கச் செயலா் ஆா்.ராமச்சந்திரன், எம்.பாலசுப்பிரமணியன், ஆா்.உமாபதி, எம்.சுரேஷ், ஆா்.கனகசபை, ஆா்.தில்லைநடராஜன், ஆா்.சேகா், வசூல் ஜி.முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். நகர பொருளாளா் எஸ்.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.