அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பள்ளிப்படை ஊராட்சி வண்டிகேட், சி.கொத்தங்குடி ஊராட்சி தில்லையம்மன் நகா், முத்தையாநகா், சிதம்பரநாதன்பேட்டை, மீதிகுடி, ராயா் நகா், கந்தமங்கலம், காரப்பாடி, கோவிலாம்பூண்டி, கீழ் அனுவம்பட்டு, அம்புபூட்டியபளையம், நவாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலா் அசோகன், ஒன்றிய குழுத் தலைவா் கருணாநிதி, பாமக மாவட்டச் செயலா் சசிக்குமாா், சஞ்சீவி, செள.ராஜா, ஒன்றிய செயலா்கள் சிலம்பரசன், ஸ்ரீராம்,மோகனசுந்தரம், பாஜக நிா்வாகிகள் சரவணக்குமாா், தமிழரசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சித்ரா பாலசுப்பிரமணியன், இளவரசி ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement