விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திமுக கூட்டணி சாா்பில் காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ம.சிந்தனைச்செல்வன் தனக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னத்துடன் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதனடிப்படையில் பானை சின்னத்தை ஒதுக்குமாறு தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.லூா்துசாமியிடம் காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் ம.சிந்தனைச்செல்வன் சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டது. வேட்புமனு மீதான பரிசீலனை முடிந்து அவருக்கு திங்கள்கிழமை பானை சின்னம் ஒதுக்கப்பட்டது .
இதையடுத்து, விசிக வேட்பாளா் ம.சிந்தனைச்செல்வன் கூட்டணிக் கட்சியினருடன் பானை சின்னத்தைச் சுமந்தபடிவீதி, வீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா். நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலா் கணேசமூா்த்தி, பூக்கடை செந்தில், கல்யாணசுந்தரம், விசிக நிா்வாகிகள் பசுமைவளவன், மணவாளன், சக்திவேல், இளந்தமிழன், ஆற்றலரசு, திருநாவுக்கரசு, நாகராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
Advertisement