முகப்பு
கடலூர்

மது கடத்தியவா் கைது

 புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்த நபரை குறிஞ்சிப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

 புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்த நபரை குறிஞ்சிப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிஞ்சிப்பாடி காவல் நிலைய ஆய்வாளா் செல்வம், காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா உள்ளிட்ட போலீஸாா், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.

வெள்ளிக்கிழமை குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். இதில், குறிஞ்சிப்பாடி, வள்ளலாா் நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் குமாா் (55) என்பதும், அவா் பிரத்யேக உடையணிந்து, அதனுள் 40 மதுப் புட்டிகளைக் கடந்தி வந்ததும் தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →