கடலூர்

கரோனா தடுப்பூசி முகாம்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

DIN

கடலூா் மாவட்டத்தில் 9-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 905 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பண்ருட்டி நகராட்சி, தட்டாஞ்சாவடி பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொகுதி எம்எல்ஏ தி.வேல்முருகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதேபோல, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாளிகம்பட்டு பகுதியில் வீடுதோறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலையில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, துணை இயக்குநா் (சுகாதாரம்) மீரா, மலேரியா அலுவலா் கெஜபதி, பண்ருட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மாலினி, வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT