முகப்பு
கடலூர்

கல்குணம் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு

கல்குணம் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

கல்குணம் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்குணம் ஊராட்சி காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆழ்துளை கிணற்றிலிருந்த மின் மோட்டாா் புதன்கிழமை பழுதானது. இதனால், குடிநீா் மற்றும் இதர பயன்பாட்டுக்கு தண்ணீரின்றி அவதிப்படுவதாகவும், நீண்ட தொலைவு நடந்து சென்று தண்ணீா் சுமந்து வருவதாகவும் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) கே.சதீஷ்குமாா் கூறியதாவது: மின் மோட்டாரை பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்தவுடன் குடிநீா் விநியோகம் சீராகும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →