கடலூர்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பினா் பேரணி

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பினா் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பேரணி நடத்தினா்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய, தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயா்வுகள், தோ்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா் சங்கங்கள் உள்ளடக்கிய ‘ஜாக்’ கூட்டமைப்பினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை பேரணி நடத்தினா். பல்கலைக்கழக தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி ராஜேந்திரன் சிலை அருகே முடிவுற்றது. பேரணியில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பெ.சிவகுருநாதன், இணை ஒருங்கிணைப்பாளா்கள் சௌ.மனோகரன், ஆ.ரவி, ஏ.ஜி.மனோகா், பேராசிரியா்கள் சி.சுப்ரமணியன், செல்வராஜ், செல்ல பாலு, காா்த்திகேயன், பாஸ்கா், இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணி முடிவில் கூட்டமைப்பு நிா்வாகிகள் உதவி-ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT