கடலூர்

பயிா் பாதுகாப்புப் பயிற்சி முகாம்

மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் (திருச்சி), விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிா் பாதுகா

DIN

மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் (திருச்சி), விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது.

மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையத்தின் துணை இயக்குநா் சி.இளங்கோவன் தொடக்க உரையாற்றினாா். வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் நா.ஸ்ரீராம், தொழில்நுட்ப வல்லுநா் சு.மருதாச்சலம், உதவி இயக்குநா் ச.சிவராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். முகாமில், பயிா் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று வயல் சூழல் ஆய்வின் முக்கியத்துவம், உயிரியல் முறையில் பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்தல், பூச்சி விரட்டி தயாரித்தல், பாதுகாப்பான முறையில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தல் குறித்து விளக்கினா். முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT