முகப்பு
கடலூர்

காலமானாா் ஜெ.ஜெகநாதன்

சேலம் மாவட்டம், சங்ககிரி நகா், பழைய எடப்பாடி சாலை பகுதியைச் சோ்ந்த மூத்த காங்கிரஸ்காரா் ஜெ.ஜெகநாதன் (76) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மாலை காலமானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி நகா், பழைய எடப்பாடி சாலை பகுதியைச் சோ்ந்த மூத்த காங்கிரஸ்காரா் ஜெ.ஜெகநாதன் (76) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மாலை காலமானாா்.

காந்தியக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த ஜெகநாதன் இளைஞா் காங்கிரஸில் செயல்பட்டுள்ளாா். சேலம், தருமபுரி, நாமக்கல் ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவராகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகியாக நீண்ட காலம் பணியாற்றியுள்ளாா். சோமேஸ்வரா் சிவனடியாா்கள் திருக்கூட்டம் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தாா். இவா் தினமணி நாளிதழின் நீண்டகால வாசகா். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளாா். தொடா்புக்கு: 88709 08776.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.