கடலூா்: மழைக்கு 20 குடிசைகள் சேதம்
கடலூா் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 20 குடிசைகள் சேதம் அடைந்ததாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
கடலூா் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 20 குடிசைகள் சேதம் அடைந்ததாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 67.4 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
எஸ்.ஆா்.சி. குடிதாங்கி 48, கடலூா் 47.9, வானமாதேவி 29.6, கொத்தவாச்சேரி 24, புவனகிரி 21, வடக்குத்து 16, காட்டுமன்னாா்கோவில், கீழச்செருவாய் தலா 14, அண்ணாமலை நகா் 13.8, பண்ருட்டி 13, குறிஞ்சிப்பாடி 12, சேத்தியாத்தோப்பு 11, விருத்தாசலம் 10, ஸ்ரீமுஷ்ணம் 7.3, லக்கூா் 7.1, பெலாந்துறை 6, சிதம்பரம், பரங்கிப்பேட்டை தலா 5.6, மே.மாத்தூா், லால்பேட்டை தலா 5, குப்பநத்தம் 4.4, தொழுதூா் 4, வேப்பூா் 3, காட்டுமயிலூா் 2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 397.70 மி.மீ. மழையும், சராசரியாக 15.91 மி.மீ. மழையும் பதிவானது.
மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் இதுவரை 8 கால்நடைகள் உயிரிந்துள்ளன; 20 குடிசைகள், 7 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன; சுமாா் 51.5 ஹெக்டோ் பரப்பிலான வயல்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.