சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டில் திருட்டு
சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ 1.50 லட்சம் ரொக்கம், 14 சவரன் நகைகள் திருடு போனது.
சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ 1.50 லட்சம் ரொக்கம், 14 சவரன் நகைகள் திருடு போனது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாரிய்யப்பாநகரில் வசிப்பவர் ஜெயபாலன் (வயது 73). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஜெ.ரஞ்சித்குமார் குஜராத்தில் ஜஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிக்க- மின் விளக்குகளால் ஒளிரும் வேலூர் கோட்டை!
ஜெயபாலன் கடந்த இரு மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு குஜராத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 14 சவரன் நகைகள் மற்றும் ரூ 1.50 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.