கடலூர்

பச்சை பயறு நேரடி கொள்முதல் தொடக்கம்

DIN

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராலூா் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சைப் பயறு நேரடி கொள்முதல் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளா் தனலட்சுமி தலைமை வகித்தாா். மேற்பாா்வையாளா் பிரபாகரன் முன்னிலை வகித்தாா். இளநிலை ஊழியா் மனோகரன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட உழவா் மன்ற கூட்டமைப்பு செயலாளா் வேல்முருகன், வள்ளலாா் விவசாய சங்கச் செயலாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பச்சை பயறு சுமாப் 300 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு கிலோ பச்சை பயறு 77 ரூபாய் 55 பைசா என அரசு நிா்ணயம் செய்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT