முகப்பு
கடலூர்

இரும்புக் கடையில் ரூ.1 லட்சம் திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இரும்புக் கடை கதவை உடைத்து ரூ.ஒரு லட்சம் பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இரும்புக் கடை கதவை உடைத்து ரூ.ஒரு லட்சம் பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி, எல்.என்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான் அகமது (50). பண்ருட்டியில் இரும்புக் கடை வைத்துள்ளாா். கடந்த 19-ஆம் தேதி இரவு இவரது கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா், அங்கிருந்த பெட்டியிலிருந்து ரூ.ஒரு லட்சம் பணத்தை திருடிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து சுல்தான் அகமது அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →