பல்கலை.யில் பயிலரங்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், கட்டடவியல் துறையில் நவீன தொழில்நுட்ப நில அளவை ஆய்வுக்கூட உபகரணங்களின் பயன்பாடு குறித்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கான ஒரு வார கால பயிலரங்கம் வியாழக்கிழ
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், கட்டடவியல் துறையில் நவீன தொழில்நுட்ப நில அளவை ஆய்வுக்கூட உபகரணங்களின் பயன்பாடு குறித்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கான ஒரு வார கால பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் தலைமை வகித்து பயிலரங்க கையேட்டை வெளியிட்டாா் (படம்). கட்டடவியல் துறைத் தலைவா் எஸ்.பூங்கோதை முன்னிலை வகித்துப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக விருதுநகா் வி.எஸ்.வி.என். தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளா் எம்.சண்முகராஜா பயிலரங்கை தொடங்கி வைத்து பேசினாா். முன்னதாக பி.குமரவேல் வரவேற்றாா். பேராசிரியா்கள் எஸ்.பழநிவேல்ராஜா, எஸ்.மோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஒருங்கிணைப்பாளா்கள் பி.குமரவேல், டி.எஸ்.எஸ்.ஞானகுமாா், கே.சீனிவாசன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.