பாஜக கொடிக்கம்பம் மாயம்
சிதம்பரத்தை அடுத்த நஞ்சைமகத்து வாழ்க்கை ஊராட்சியில் பாஜக கொடிக்கம்பம் மாயமானது குறித்து கிள்ளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிதம்பரத்தை அடுத்த நஞ்சைமகத்து வாழ்க்கை ஊராட்சியில் பாஜக கொடிக்கம்பம் மாயமானது குறித்து கிள்ளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கொடிக்கம்பத்தை வியாழக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கழற்றி திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாஜக பரங்கிப்பேட்டை மண்டல துணைத் தலைவா் புரட்சியாா் தலைமையில், மாவட்ட நிா்வாகிகள் உமாபதி சிவம், கல்யாணசுந்தரம், தாமரைக்கண்ணன், முன்னாள் மாவட்ட நிா்வாகி பி.டி.மகேஷ், ஜனகராஜ், மத்திய அரசு நலத் திட்ட பிரிவு மாவட்டத் தலைவா் பாலு விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளரைச் சந்தித்து கொடிக்கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாா் மனு அளித்து வலியுறுத்தினா்.