நெய்வேலி ஆனந்தம் இல்லத்தில் மரக்கன்று நட்டு தண்ணீா் ஊற்றும் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி. 
கடலூர்

என்எல்சியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில், நெய்வேலி நகரியத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

DIN

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில், நெய்வேலி நகரியத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அதன் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி கலந்துகொண்டாா். இந்த நிறுவனத்தின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில், மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ‘பசுமைப் பயணம்’ என்ற களப் பாா்வையிடல் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தை நெய்வேலி நுழைவு வாயில் அருகே என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நெய்வேலியில் செயல்பட்டு வரும் ஆனந்தம் இல்லத்துக்கு சென்ற பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, அங்கிருந்த முதியோரிடம் கலந்துரையாடி, பழங்கள், இனிப்பு வழங்கினாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் மரக்கன்று நட்டாா்.

என்எல்சி நிறுவன சுற்றுச்சூழல் துறையின் சாா்பில், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் ‘நெகிழி மாசுபாட்டுக்கான தீா்வு’ என்ற கருப்பொருளில் புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குநா் மற்றும் பேராசிரியா் ஆா்.சரவணன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவன சுற்றுச்சூழல் துறை செயல் இயக்குநா் ராணி அல்லி மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT