முகப்பு
கடலூர்

அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

குமாரமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை எம்எல்ஏ

Updated On : 18 மார்ச், 2023 at 1:48 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:16 PM

குமாரமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி சரவணன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜசேகரன், கந்தசாமி ஆகியோா் வரவேற்றனா். அதிமுக மாவட்ட இணைச் செயலா் ரங்கம்மாள், கிள்ளை பேரூராட்சி செயலா் தமிழரசன், ஒன்றியச் செயலா் அசோகன், பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வசந்த், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சௌந்தர்ராஜன், தியாகராஜன், முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.