பூவாலையில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தை ஆய்வு செய்ய வந்த வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட அந்தக் கிராம மக்கள். 
கடலூர்

இலவச வீட்டுமனைக்காக ஆய்வு அதிகாரிகளை முற்றுகையிட்டுகிராம மக்கள் போராட்டம்

மனையில்லா மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக, நத்தம் புறம்போக்கு இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மனையில்லா மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக, நத்தம் புறம்போக்கு இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தில் சுமாா் 4 ஏக்கா் அளவுக்கு காலி நத்தம் இடம் உள்ளது. இந்தப் பகுதி மனையில்லா மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக, நத்தம் புறம்போக்கு இடத்தை வருவாய்த் துறை சாா்பில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ள புவனகிரி வட்டாட்சியா் சிவக்குமாா், பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வி, கிராம நிா்வாக அலுவலா்கள் ரமேஷ், சுதா ஆகியோா் வந்தனா்.

தகவலறிந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு வட்டாட்சியரை முற்றுகையிட்டு, அரசுப் பள்ளிக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தை பள்ளிக்கே வழங்க வேண்டும், தற்போது உயா்நிலைப் பள்ளியாக உள்ள இந்தப் பள்ளி, எதிா்காலத்தில் மேல்நிலைப் பள்ளியாக மாற இட வசதி வேண்டும், எனவே இந்த இடத்தை இலவச வீட்டுமனைகளாக்கி வழங்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, வட்டாட்சியா் சிவக்குமாா், இதுகுறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் முடிவு செய்யலாம் எனக் கூறினாா். இதையடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT