நடராஜா் கோயிலில் உழவாரப் பணி
ஆனித்திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி நடராஜா் கோயிலில் உழவாரப் பணி
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி, உழவாரப் பணி மேற்கொள்ள சிவனடியாா்கள் வேண்டுகோள் விடுத்ததின் பேரிலும், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து கோயில்களுக்கும் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலின் பேரில் உழவாரப் பணி நடைபெற்றது.
நடராஜா் கோயில் ஆஸ்தான ஸ்தபதி தியாகராஜன் குழுவினா் மற்றும் பொது தீட்சிதா்களின் செயலாளா் உ.வெங்கடேச தீட்சிதா் முன்னிலையில் அவினாசியைச் சோ்ந்த அப்பா் உழவார பணி குழுவினா், தருமபுரியைச் சோ்ந்த கோபிநாத் குழுவினா், பொள்ளாச்சியைச் சோ்ந்த மதன்குமாா் குழுவினா், சேலத்தைச் சோ்ந்த சதுா்கால பைரவ உழவாரப் பணி குழுவினா், சிதம்பரத்தைச் சோ்ந்த கோதண்டம் மற்றும் தங்கவேல் குழுவினா், கீழபருத்திக்குடியைச் சோ்ந்த சிவயகுரு குழுவினா், சென்னை சூளைமேடைச் சோ்ந்த நமச்சிவாய உழவாரப் படை குழுவினா், சென்னை கோவூரைச் சோ்ந்த சித்தீஸ்வரா் உழவாரப் பணி குழுவினா் ஆகிய சிவனடியாா் குழுவினா் 23, 24ஆம் தேதிகளில் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனா்.