அரசு மருத்துவமனைக்கு நல உதவி
சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு முன்னாள் நகைக்கடை உரிமையாளா் சங்கத் தலைவா் ஆா்.முத்துக்குமரேசன் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு 200 படுக்கை விரிப்புகள், 200 பிரட் பாக்கெட்டுகளை சமூக ஆா்வலா் மைதிலி, ராகவி, ஸ்ரீமதி ஆகியோா் வழங்கினா். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.