கோவிலாம்பூண்டியில் நடமாடும் மருத்துவ முகாம்
சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.பொற்கொடி உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.அமுதா அறிவுறுத்தலின் பேரில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவப்பிரகாசம் மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது.
பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியும் வீட்டைச் சுற்றி தண்ணீா் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார நலக் கல்வியும் வழங்கப்பட்டது.
கோவிலாம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பரவாமல் இருக்க நடமாடும் மருத்துவக் குழு மருத்துவா் மிதிலை ராஜன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
களப் பணிகளில் சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், சௌந்தரராஜன், ராஜன் மற்றும் களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.