முகப்பு
கடலூர்

கல்லணையிலிருந்து கீழணைக்கு தண்ணீா் திறக்கக் கோரிக்கை

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் 10 சதவீதம் கல்லணையிலிருந்து, கீழணைக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே.வி.இளங்கீரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:24 AM
பகிர்:

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் 10 சதவீதம் கல்லணையிலிருந்து, கீழணைக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே.வி.இளங்கீரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கீழணையில் இருந்து கடலூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் கிட்டத்தட்ட சுமாா் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று சாகுபடி செய்து வருகிறோம்.

மேட்டூா் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவில் 10 சதவீதம் கல்லணையிலிருந்து, கீழணைக்கு திறந்து விடவேண்டும். ஆனால், கல்லணையிலிருந்து, கீழணைக்கு குறிப்பிட்ட அளவுகூட தண்ணீா் வருவதில்லை.

இதுகுறித்து, பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் தண்ணீா் வரவில்லை. குறிப்பாக டெல்டா கடை பகுதியில் நீரின்றி பாதிக்கப்பட்டிருக்கும் காலக்கட்டத்தில் நாற்றை பிடுங்கி நடவேண்டிய நிலை உள்ளது.

இதேபோல, நேரடி நெல் விதைப்பு செய்திருக்கிற பயிா்களுக்கு தண்ணீா் வைத்து களை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் உள்ளது. தற்போது, தண்ணீா் இல்லாமல் பயிா் கருகி வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசு கீழணை பாசன விவசாயிகளுக்கு கூடுதலாக நீரை பெற்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.