சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம் DPS
கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்...

இணையதளச் செய்திப் பிரிவு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தீட்சிதர்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர்.

பின்னர், மேளதாளத்துடன் கோயில் செயலர் த. சிவசுந்தர தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

National flag hoisting at Chidambaram Natarajar Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் போட்டியில் பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

சூரத்தில் கட்டுமானத்தில் புல்லட் ரயில் திட்டம்: பிரதமர் மோடி ஆய்வு!

துல்கர் சல்மானின் காந்தா பட முதல்நாள் வசூல்!

சிதம்பரம் நவாப் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் உள்ளிருப்பு போராட்டம்!

SCROLL FOR NEXT