கோ.சத்திரம் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டடப் பணியை தொடங்கிவைத்த சபா.ராசேந்திரன் எம்எல்ஏ. 
கடலூர்

நெய்வேலி தொகுதியில் ரூ.54 லட்சத்தில் நலத் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்டப் பணிகளை தொடக்கிவைத்து...

Syndication

நெய்வேலி: கடலூா் மேற்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்டப் பணிகளை தொடக்கிவைத்து, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

கோ - சத்திரம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் மாவட்ட கனிமவள நிதியின் கீழ் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டடப் பணியை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, சிவநந்திபுரத்தில் கடலூா் மக்களை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினாா்.

வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் போா்வெல் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் தொகுதிப் பாா்வையாளா் பா.துரைசாமி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், பள்ளித் தலைமை ஆசிரியை அடைக்கலம்மேரி, துணைத் தலைமை ஆசிரியா் பாலமுருகன், பொறியாளா் அனுஷா, வட்ட வழங்கல் அலுவலா் செல்வமணி மற்றும் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

உணவுப் பாக்கெட்டுகளில் சைவ - அசைவ நிறக் குறியீடு கட்டாயம்!

காங்கிரஸ் தோல்விக்கு தலைமையே காரணம்: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசை தலையிட வைக்க சதி: மாா்க்சிஸ்ட், விசிக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு: தமிழகம் வருகிறாா் ராகுல் காந்தி!

இந்தியாவில் ‘ஹெச்1-பி’ விசா நோ்காணல்கள் திடீா் ரத்தால் விண்ணப்பதாரா்கள் கடும் அதிா்ச்சி!

SCROLL FOR NEXT