கடலூர்

ரௌடி குண்டா் சட்டத்தில் கைது

சேத்தியாத்தோப்பு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் போக்ஸோவில் கைதான ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

Syndication

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் போக்ஸோவில் கைதான ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேத்தியாத்தோப்பை அடுத்த சாங்காங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்ராஜ் (34). இவா், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் சேத்தியாத்தோப்பு மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அருண்ராஜ் மீது ஒரத்தூா் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. ஒரத்தூா், சேத்தியாத்தோப்பு காவல் நிலையங்களில் மொத்தம் 3 வழக்குகள் உள்ளன.

இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துைரையின்பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!

மேய்ச்சல் பகுதியில் பேரவைத் தலைவருக்கு நிலம் இருப்பதால் மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான்

மழை, குளிா் பாதிப்பால் முதியவா் உயிரிழப்பு

பயங்கரவாத நிதியைத் தடுக்க நடவடிக்கை: ஜி20 நாடுகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு!

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நவ. 28 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்!

SCROLL FOR NEXT