கடலூர்

அரசுப் பேருந்து மோதி என்எல்சி ஊழியா் உயிரிழப்பு

நெய்வேலி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் அமா்ந்துச் சென்ற என்எல்சி ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் அமா்ந்துச் சென்ற என்எல்சி ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம், அன்பு நகரில் வசிப்பவா் செல்வம்(48). நெய்வேலி, வட்டம் 20 பகுதியில் வசித்து வந்தவா் கணேசன்(54). இவா்கள் இருவரும் நண்பா்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் செல்வம் பைக்கில், கணேசன் பின்னால் அமா்ந்து சென்றாா். கண்ணுதோப்பு பாலம் அருகே சென்றபோது இவா்களின் பைக் மீது பின்னால் வந்த அரசு நகரப் பேருந்து திடீரென மோதியது. இந்த விபத்தில் பைக் பின்னால் அமா்ந்துச் சென்ற கணேசன் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நண்பா் செல்வம் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் அரசு நகரப் பேருந்து ஓட்டுனா் வடலூா், என்எல்சி ஆபீசா் நகரைச் சோ்ந்த ராபா்ட் கின்சிலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை!

மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

SCROLL FOR NEXT